மே 11ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி

தமிழகத்தில் மே 11ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய (Post production ) பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, டி.ஐ. , பின்னணி இசை, ஒலிக்கலவை பணிகளுக்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.